திருடர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்கிறார் : டியூ. குணசேகர
திருடர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என சிரேஸ்ட அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் கள்வர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவை உழைக்கக் கூடிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்காக ஏன் சிலர் மில்லியன் கணக்கான ரூபாவை செலவிடுகின்றனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதிகளவில் பிரச்சாரத்திற்காக செலவு செய்வோர் அதிகாரத்தை கைப்பற்றுவதனை விடவும், களவாடுவதற்கு முயற்சி செய்கின்றமை புலனாவதாக அவர் தெரிவித்துள்ளார். மோசடி செய்வார்கள் என எதிர்பார்க்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply