பாதுகாப்பு தினத்தை நினைவு கூருவது மக்களை விழிப்பூட்டுவதற்கு பெரிதும் உதவும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26ம் திகதியைத் தேசிய பாதுகாப்புத் தினமாக வருடா வருடம் நினைவு கூருவ தன் மூலம் அனர்த்த நிலைமை களை மக்கள் முன்கூட்டியே அறி ந்து கொள்ளும் வகையில் அவர் களை விழிப்பூட்டுவதற்கு பெரிதும் உதவும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வருட தேசியப் பாதுகாப்பு தினத் தின் நிமித்தம் விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட் டிருப்பதாவது:-

எமது நாடு சுனாமி பேரழிவு க்கு முகம் கொடுத்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியை தேசிய பாதுகாப்புக் கீர்த்திக்கு வழங்கப் படும் அங்கீகாரமாகவே நான் கருது கின்றேன்.

சுனாமி பேரழிவு எமது நாட்டு க்கு ஏற்படுத்திய சேதங்கள் ஏரா ளம். இவ்வனர்த்தத்தின் மூலம் இழ க்கப்பட்ட உயிர்கள் தவிர ஏனைய எல்லா வற்றையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மிகுந்த உறுதியுடன் நடவடிக் கைகளை மேற்கொண்டதை நீங்கள் அறிவீர்கள். இதன்போது சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய எல்லா நாடுகளையும் விட மிகச் சிறப்பாக சவால்களை வெற்றி கொண்ட எமது நாடு உலகின் பாராட்டைப் பெற்றுக் கொண்டது.

அனர்த்த நிலைமைகளை முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கான சரியான முறைமையொன்று இல்லா திருந்தமையும் நாடு முகம் கொடுத்த இப்பாரிய அழிவி ற்கு ஒரு காரணமாகும். இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்த நிலை மைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தேசிய அனர்த்த முகா மைத்துவ மத்திய நிலையம் என்பவற்றைத் தாபித்து ள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக ஆட்க ளைப்பயிற்றுவித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது.

தேசிய பாதுகாப்புத் தினத்தை வருடாந்தம் நினைவு கூருவது அனர்த்த நிலைமைகளை மக்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வகையில் அவர்களை விழிப்பூட்டு வதற்கு பெரிதும் உதவும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply