புலி சந்தேக நபர்கள் குறித்த நடவடிக்கை துரிதம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புலிகள் இயக்க சந்தேக நபர்கள் தொடர்பான நடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க  தெரிவித்தார் பூஸா, ஓமந்தை உள்ளிட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்களை நேரில் சந்தித்து அவர்களை விடுதலை செய்வதா அல்லது வழக்குத் தாக்கல் செய்வதா என்பதை அறிந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஆணைக்குழுவினால் ஏற்பட்ட திருப்பமாகுமென்றும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த 2010 செப்ரம்பர் மாதம் ஆணைக்குழு ஜனாதி பதிக்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார்.

அதேபோன்று புலிகள் இயக்க சந்தேக நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவென சட்ட மா அதிபர் குழுவொன்றை நிய மித்தார்.

பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோ தலைமையிலான நால்வர் கொண்ட இந்தக் குழு பூஸா, ஓமந்தை போன்ற முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி விடுதலை செய்யக்கூடியவர்கள் விடுவிக்கப்படுவார்கள். வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பின் அதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொள்வார்கள் என்று விக்கிரமசிங்க தெரிவித்தார். புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுகோளின் பேரில், ஆணைக்குழு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் அவர் குறிப் பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply