வட பகுதி தமிழ் மக்களின் வாழ்வை சீர்குலைக்கும் ஆயுததாரிகளை முழுமையாக ஒழித்து கட்டுவது அவசியம்
வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க் கையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆயுத தாரிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது மிகவும் அவசியம் என்று இளை ஞர்களுக்கான நாளைய அமை ப்பின் தலைவரும், அம்பாந் தோட்டை மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யாழ். குடா நாட்டின் தற் போதைய நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிய பயங்கரவாத யுத்தத்தின் கசப்பானதும், கொடியதுமான விளைவுகள் குறித்து இலங்கை வாழ் மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றாலும் அது குறித்து நேரடியானதும், ஆழமானதுமான அனுபவங்களை வடக்கு, கிழக்கு மக்களே நன்றாக அறிந்திருக்கின்றனர்.
ஆயுதங்கள் மீதும், பலாத்காரம் மீதும் நம்பிக்கை வைத்த செயற்பாட்டாளர்களின் மடமையையும், அனர்த்தத்தையும் அம்மக் கள் நன்கு உணர்ந்துள்ளனர். அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளை மிகவும் வெட்கத்துடனும், வெறுப்புடனும் நிராகரிப்பது திண்ணம்.
கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கு ஆயுதம் தாங்கிய சிலர் கொலை, கொள்ளை மற்றும் பல பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக ஜனநாயகத்தில் பங்கு கொள்ளச் செய்யும் வண்ணம் அரசாங்கம் ஜனநாயக நிறுவனங்களை தாபித்து அவற்றை வலுப்படுத்தி தடையின்றி செயற்படுத்தும் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில், முன்யோசனைகள் அற்ற வேட்டைக்காரர்களைப் போன்று சிலர் ஆங்காங்கு ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தமை மிகவும் மோசமான அச்சுறுத்தலை தோற்று வித்துள்ளது. முப்பது ஆண்டு காலமாக நிலவிய கொடிய பயங்கரவாத யுத்தத்தின் நினைவுகளை தட்டியெழுப்பி மீண்டும் தமிழ் மக்களை அதளபாதாள குழிக்குள் தள்ளும் ஓர் அபாயகரமான சமிக்ஞையாகவே இது தோன்றுகின்றது.
வடக்கில் சமாதானத்தையும், நல்லாட்சி யையும் தாபித்து, வடக்கின் வசந்தம் போன்ற அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஊடாக வடக்கில் ஏற்படுத்தி வரும் துரித பொரு ளாதார அபிவிருத்தி மூலம் வடக்கே வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு அயராது உழைத்து வருகிறது. இச்சூழ்நிலையில் ஆயுதம் தரித்த சிலர் யாழ்ப்பாணத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவது மனம் வருந்தத்தக்க விடயமாகும்.
அபிவிருத்திக்காகப் பயன்படுத்த இருந்த பெருவாரியான நிதியையும், மனித வளங்களையும், பயன்படுத்தி முப்பது ஆண்டு கால கொடிய பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கே வாழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த சமாதானமும், சகவாழ்வும் இச்செயற்பாடுகள் மூலம் அர்த்தமற்றதாக்கி விடக் கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள் ளது.
வடக்கே வாழ் மக்களுக்காக மேற் கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்திப் பணிகளையும் இவ்வாயுததாரிகளின் செயற்பாடுகள் பாதிக்கலாம். இது வடக்கே வாழ் மக்களின் துரித முன்னேற்ற த்தைப் பாதிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
ஒரு கணம் பரஸ்பர அவநம்பிக்கையும், சமூக நிலைப்பாடின்மையும் படிப்படியாக அற்றுப் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில், வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பி பரஸ்பர நம்பிக்கையும், சகவாழ்வும் படிப்படியாக விருத்தி பெற்று வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஆயுத தாரிகளின் இச்சட்ட விரோத செயற்பாடுகள் வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சந்தேகம் பரஸ்பரம் நம்பிக்கையற்ற தன்மை, சமூகப் பாதுகாப்பு அற்ற தன்மை போன்றவற்றை தோற்றுவித்து மீண்டும் அராஜகத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.இதனால் சமூக உறுதிப்பாடும் நிரந்தர சமாதானமும் பற்றிய அவர்களின் அபார நம்பிக்கையும் கேள்விக்குள்ளாகலாம். இச்சூழ்நிலையில் சமாதானமும், சக வாழ்வும் அர்த்தமற்றதாகி விடும்.
மறுகணம், வடக்கே வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வொன்றுக் குத் தேவையான சாதக சூழ்நிலையும் சிறந்த அணுகுமுறையும் தற்போது உரு வாகி இருக்கின்றது.
நீண்ட காலத்திற்குப் பின்பு உருவாகி இருக்கும் இச்சுமுக சூழ் நிலை இவ்வாயுத தாரிகளின் செயற்பாடு களால் பாதிப்படைய இடமளிக்க முடி யாது. எனவே வடக்கில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர் யாராக இருந் தாலும் சரி அவர்களுடைய அந்தஸ்து, அதிகாரம் பாராது அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் உடனுக் குடன் தாமதமின்றி முன்னெ டுக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply