சரத் பொன்சேகாவை விடுவிக்க கோரி நாளை போராட்டம்
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி நாளைய தினம் விடுதலைக்காக குரல்கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், லங்கா இ நியூஸ் தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சியத்த ஊடக நிறுவனம் தாக்கப்பட்டது தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக கொண்டே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply