மன்னாரில் வெள்ளம் காரணாமாக மக்கள் இடம்பெயர்வு; போக்குவரத்தும் பாதிப்பு

மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமம் இன்று அதிகாலை வெள்ள நீரினால் முற்று முழுதாக மூழ்கியுள்ளது. தென்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக அங்கு தேங்கியிருந்த வெள்ள நீர் அருவியாற்றின் மூலம் தம்பனைக்குளம் கிராமத்தை வந்தடைந்துள்ளது.இதனால் குறித்த கிராமத்தின் சுமார் 330 குடும்பங்களைச் சேர்ந்த 2704 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சின்னப்பண்டிவிரிச்சான் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.தம்பனைக்குளம் பிரதான வீதியில் படகுகள் மூலம் மக்களை ஏற்றி இறக்கும் சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தம்பனைக்குளம் பிரதான வீதியிலும்,மடு பிரதான வீதியிலும் வெள்ள நீர் தேங்கி உள்ளது.இதனால் மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடான வவுனியா,யாழ்ப்பாணம்,மதவாச்சி,அனுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களுக்கான போக்குவரத்துக்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply