புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அகிலனுக்கு எதிராக ஜெர்மனிய நீதிமன்றம் பயங்கரவாத குற்றச்சாட்டு

புலிச் செயற்பாட்டாளர் ஒருவருக்கு எதிராக ஜெர்மனிய நீதிமன்றமொன்று பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஜெர்மனுக்கான பேச்சாளராக குறித்த நபர் கடமையாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஜெர்மன் குடியுரிமைப் பெற்றுக் கொண்ட டபிள்யூ அகிலன் என்ற 35 வயதுடைய நபர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் அங்கத்துவம் வகித்த குற்றத்திற்காக அகிலனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உபகரணங்களை புலிகளுக்காக அகிலன் அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே மூன்று பேருக்கு எதிரான ஜெர்மன் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply