எரிக் சொல்ஹெய்மின் மத்தியஸ்தம் அவசியமில்லை : அரசாங்கம்
புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எரிக் சொல்ஹெய்மின் மத்தியஸ்தம் அவசியமில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்க முடியும் என நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் அறிவித்திருந்தார்.
எரிக் சொல்ஹெய்மின் ஒத்துழைப்பு அவசியமில்லை எனவும், எதிர்காலத்தில் மத்தியஸ்தம் வகிக்குமாறு எரிக் சொல்ஹெய்மை அழைக்கப் போவதில்லை என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் அரசாங்கம் வெற்றிகரமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும், மூன்றாம் தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது எரிக் சொல்ஹெய்ம் வெற்றிகரமாக மத்தியஸ்தம் வகிக்கத் தவறியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுய லாப நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே நோர்வே உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான நவடடிக்கைகளுக்கு உதவியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply