தமிழ் பேசும் பொலிஸார் 2500 பேர் விரைவில் நியமனம்

பொலிஸ் சேவையில் மேலும் 2500 தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். ஏற்கனவே கொன்ஸ்டபிள் தரத்தில் 500 பேரை இணைத்துக் கொண்டுள்ளதுடன், புதிதாக உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் பரிசோதகர்கள், பெண் கொன்ஸ்டபிள்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவால் மும்மொழிகளிலும் வெளியி டப்பட்டுள்ள பொலிஸாருக் கான உரையாடல்கள் அடங் கிய கைநூலை பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் கொழும்பு தொழில்வாண்மை யாளர்களின் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சின் செயலாளர் திருமதி மல்காந்தி விக்கிரமசிங்க, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் என். செல்வகுமாரன், முன்னாள் தலைவர் ராஜா கொல்லுரே, கனேடிய உயர் ஸ்தானிகர் புறூஸ் லெவி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கனேடிய அரசின்- சீடா நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸாருக்கான உரையாடல் நூல் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பொலிஸ் திணைக் களத்திற்கென 65 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அவற்றை பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான வைபவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்வதாகவும் இங்கு அறிவித்த பொலிஸ் மா அதிபர், பொலிஸாருக்கு ஆங்கில மொழி பயிற்சி நெறியொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கவுள்ள தாகவும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply