பிரிட்டனுக்கான பதில் உயர்ஸ்தானிகராக அம்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்
பிரிட்டனுக்கான பதில் இலங்கை உயர்ஸ்தானிகராக பீ. எம். அம்ஸா நியமிக்கப்பட்டுள் ளார். உயர்ஸ்தானி கராகக் கடமையாற்றிய கலாநிதி நிஹால் ஜயசிங்க ஓய்வு பெற்றதையடுத்து பிரதி உயர் ஸ்தானிகரான அம்ஸா, பதில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் கொன்சியுலராகக் கடமையாற்றிய கே. பத்மநாதன் பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானி கராலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பத்மநாதனை பிரித்தானியாவிற்கான உயர் ஸ்தானிகராக அரசாங்கம் நியமிதுள்ளதென்று நேற்று சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply