நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டை தொடர்பில் இலங்கை கடும் எதிர்ப்பு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விநியோகத்திற்கு வரும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் ஈழம் என குறிப்பிடப்பட்டு வெளியிடப்படும் இந்த அடையாள அட்டையை விநியோகிக்க அமெரிக்க அரசாங்கம் இடமளித்துள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும் குறித்த அடையாள அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகில் இல்லாத நாடு ஒன்றுக்காக தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது சட்டவிரோதமானது என அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. எனினும் அமெரிக்காவில் வசிக்கும் விஸ்வநாதன் ருத்ரகுமாரனுக்கு அமெரிக்கா இந்த சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொள்ள இடமளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply