சர்வதேச நிபுணர்களுடன் ஐ.நா. நிபுணர் குழு இலங்கை விவகாரம் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவானது சர்வதேச நிபுணர்கள் பலருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் இலங்கையில் மேற்கொள்ள முடியுமான நிபுணர் குழுவின் செயற்பாடுகள் என்பன குறித்து அதன் போது ஆராயப்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவுடன் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் வட்டாரத்திலிருந்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

கலந்துரையாடலின் முடிவில் இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இறுதி முடிவொன்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply