இந்திய – பாக்கிஸ்தான் சபாநாயகர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தார்கள்
பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் ஆசிய பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய லோக் சபாவின் சபாநாயகர் மீரா குமார் மற்றும் பாக்கிஸ்தான் சபாநாயகர் பெமீடா மாசா ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் வைத்து நேற்று சந்தித்துள்ளனர்.
அந்த அமைப்பின் மூன்றாவது ஆசிய பிராந்திய மாநாடு நேற்று பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் தலைவரும், இந்திய லோக் சபாவின் சபாநாயகர் மீரா குமார் இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்தமுறை, மாநாட்டில் இரண்டு நாள் வர்த்தக மாநாடு இடம்பெறவுள்ளது.
அதேவேளை, காலநிலை சீர்கேடு, இயற்கை அனர்த்தங்கள், வறுமையை ஒழித்தல், சிறார் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பாக பிராந்திய மட்டத்தில் இங்கு ஆராயப்படவுள்ளது. பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் ஆசிய பிராந்திய மாநாட்டின் வர்த்தக அமர்வை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் சிகிரியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு பிராந்திய பிரதிநிதிகள் விஜயம் செய்யவுள்ளனர்.
இதன் போது தெற்காசிய பிராந்தியத்திற்கு தாக்கம் செலுத்துகின்ற வர்த்தக ரீதியான நெருக்கடிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தொல்பொருள் மற்றும் உரிமங்கள் தொடர்பான அனுபவங்கள் பரிமாறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply