பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையிலான சர்வாதிகார ஆட்சியை ஏற்க முடியாது : ரணில்

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுபீட்சம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுநலவாய பாராளுமன்ற பேரவையின் 3ம் அமர்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோசமான ஆட்சி மற்றும் ஊழல் மோசடிகளினால் மக்களுக்கும் நாட்டுக்கும் எதுவித நன்மையும் கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஊழல் மோசடிகளை மேற்கொள்ளும் தலைவர்களுக்கு எதிராக உலக மக்கள் அணி திரண்டு வருவதனை தற்போது அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளை மூடிமறைப்பது ஜனநாயகமாகாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
பொருளாதார அபிவிருத்தியை காரணம் காட்டி நாட்டில் அரசியல் சாசன ரீதியான சர்வாதிகாரத்தை மேற்கொள்ளும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பொருளாதார அபிவிருத்தி அர்த்தமுள்ளதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply