காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை தேவை : ரவூவ் ஹக்கீம்

வடக்கே மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமாகிய ரவூவ் ஹக்கீம், காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை ஒன்றைப் பேணுவதற்கு அரச உயர்மட்டத்தினருக்கு அழுத்தத்தைக் கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், சந்தேகத்தின்பேரிலும் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் குற்றம் இழைத்திருப்பவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்து வழக்குகளை விரைவில் முடிப்பதற்கும், குற்றமற்றவர்களாயின் அதனைக் கண்டறிந்து விடுதலை செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

இதற்கென ஏற்கனவே 15 சட்டவாதிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதியமைச்சர் தெரிவித்தார்.

மன்னார் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு வெள்ள நிலைமைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில இடங்களுக்குச் சென்று மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply