இலங்கையில் சமாதானம் நிலைக்க பிரித்தானியா தொடர்ந்து ஆதரவு
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் சமாதானம் நிலைப்பதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என பிரித்தானியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் உறுதியளித்தார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நியமனப் பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்த பின்னரே ரன்கின் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் வரலாற்று ரீதியில் காணப்படும் நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் காணப்படும் நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும், பிரித்தானியாவு க்கும் இடையில் வர்த்தகம், சுற் றுலா போன்ற துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது மேலும் அபிவிருத்தியடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், அண்மையில் இலங்கை யின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply