தமிழகத்தில் உள்ள அகதிகள் நடைபயணத்தில்
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் புது டில்கிக்கான நடைப்பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 100 இலங்கை அகதிகள் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர். தமிழகம் மற்றும் ஒரிசா ஆகிய அகதி முகாம்களில் உள்ளவர்களே இந்த பயணத்தை நடத்துகின்றனர்.
டில்கியில் உள்ள அரசாங்க மற்றும் எதிர்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, 1987ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்து இலங்கை உடன்படிக்கை அடிப்படையில் தமக்கான உரிமைகளை நிர்ணயிக்குமாறு கோரும் நோக்கில் இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணம் சுமார் 2005 கிலோமீற்றர் நீளமானது என தெரிவிக்கப்படுகிறது. ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply