இலங்கை எல்லைக்குள் அத்துமீறல் தமிழ்நாட்டு மீனவர்கள் ஒப்புதல்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறியது மட்டுமல்ல பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடித்ததை தமிழக மீனவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதுடன் யாழ். மீனவர்களிடமும் மன்னிப்புக் கோரினர். தம்மை விடுதலை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

யாழ். மீனவர்களால் சுற்றிவளைத்து கரைக்கு அழைத்துவரப்பட்ட 112 தமிழக மீனவர்களும் நேற்று பருத்தித்துறை பொலிஸாரினால் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று மணியளவில் கரைக்கு அழைத்துவரப்பட்ட தமிழக மீனவர்களுக்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜம் உணவு, உடை உட்பட அனைத்து தேவைகளையும் கவனித்து வருகிறது.

நேற்று காலை தமிழக மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன் அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.

யாழ். நகரிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வீ. மகாலிங்கமும் நேற்றுக்காலை முதல் தமிழக மீனவர்களுடன் உரையாடியதுடன் அவர்களது தேவைகள் குறித்தும் அருகில் இருந்தபடியே கவனித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவரு வதாவது,

பருத்தித்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழில் செய்தார்கள் என்ற காரணத்தினால் 112 தமிழக மீனவர்கள் யாழ். மீனவர்களால் பருத்தித்துறை கரைக்கு கொண்டுவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்தோடு அவர்கள் வசமிருந்த பதினெட்டு இழுவைப் படகுகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இலங்கை கடல் எல்லையினுள் நுழையும் இந்திய மீனவர்கள் தமது கடல் வளங்களை சூறையாடிச் செல்வதுடன் வடபகுதி மீனவர்கள் வலைகளையும் சேதமாக்கிச் செல்வதாக நீண்டகாலமாக வடபகுதி தமிழ் மீனவர்கள் குற்றச்சாட்டி வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வடபகுதி பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைபோலவே வட பகுதி கடற்பரப்பி ற்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடித்ததுடன் தமது வலைகளை யும் சேதமாக்கியத்தை அறிந்த வடமராட்சி கடற்றொழிலாளர்கள் தமது படகுகளில் திரண்டு சென்று நியாயம் கேட்டபோது ஏற்பட்ட தகராறு அடுத்து இந்திய மீன வர்களை அவர்களது ரோலர்களுடன் பரு த்தித்துறை கடற்கரைக்கு இழுத்து வந்தனர்.

தகவலறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். அங்கிருந்தவாறே கடற்படைத் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபருடன் தொடர்புகொண்ட நிலையில் வடபகுதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரக்கோன் மற்றும் வட பிராந்திய பதில் கடற்படைக் கட்டளைத் தளபதி கொமடோர் என். கே. டி. நாணயக்கார ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

இந்திய மீனவர்களினால் தமக்கு ஏற்பட்ட நீண்டகால பாதிப்புக்களை எடுத்துக்கூறிய கடற்றொழில் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை மற்றும் கடற்றொழில் சங்கத் தலைவர் அருள்தாஸ் ஆகியோர் தமக்கு உரிய நியாயத்தை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நாகபட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேற்படி நூற்றிபன்னிரண்டு தமிழக கடற்றொழிலாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது.

வட மராட்சி கடற்றொழிலாளர்களுடனும் கடற்றொழில் சமாச பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். வடபகுதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரக்கோனும் உடனிருந்தார்.

இந்நிலையில் தாம் வடபகுதி கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் மேற்கொண்டதை இந்திய கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதுடன் தமக்கு மன்னிப்பளித்து விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

ரேசமயம் 112 பேர் பருத்தித்துறை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர்களை பராமரிப்பதில் உள்ள சிரமங்களை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு வடமராட்சி கடற்றொழில் சமாசத்தினர் முன்வந்தனர்.

இதனை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரே தாய்மொழியினை பேசுவது மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற ரீதியில் வடமராட்சி சமாசத்தினரின் மனிதாபி மானத்தை பாராட்டியதுடன் சட்டம் தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பும் வரையில் அவர்களை கெளரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது எமது கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply