இந்திய மீனவர்கள் சிறையில்: இன்று விடுதலையாம் கிருஷ்ணா
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள், இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா,
“இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு இந்தியாவின் சார்பில் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்தேன்.
இலங்கை மீனவர்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நமது மீனவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, இரு தரப்பு கூட்டு செயல் நடவடிக்கை குழு விரைவில் கூடிப்பேசி விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.
இருநாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிப்பது குறித்து அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என்றும் யோசனை தெரிவித்து இருக்கிறேன்.
கச்சத்தீவுக்கு என்று தனி வரலாறு உள்ளது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சர்வதேச நடைமுறைக்கு உட்பட்டது. எனவே இந்த விவகாரத்தில், யாரும் தனிப்பட்ட எந்த முடிவும் எடுக்க முடியாது.
இந்தியா இலங்கைக்கு இடையே எப்போதும் பரஸ்பரம் நல்லுறவு இருந்து வருவதால், இந்த பிரச்சினையில் பதற்றத்தை தணிப்பதற்கு நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்றும், சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
இலங்கை அரசின் தலைமை நீதிபதியிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஜீ.எல்.பீரிஸ் உறுதி அளித்து இருக்கிறார். இலங்கையில் போயா தினத்திற்கு நீதிமன்றம் விடுமுறையாகும். இன்று நீதிமன்றம் திறந்தவுடன், சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply