பஹ்ரைனில் போராட்டம் தீவிரம்: 3 பேர் சாவு; 250 பேர் காயம்
பஹ்ரைன் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் மனாமாவில் முத்து சதுக்கத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டை பிரயோகித்தனர். போலீஸர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எகிப்தில் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்ததால் முபாரக் பதவி விலகினார். எகிப்தை தொடர்ந்து பல அரபு நாடுகளில் சர்வாதிகார அரசுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்துள்ளது. பஹ்ரைனிலும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைமையில் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஹ்ரைனில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மன்னராட்சிக்கு எதிராக ஷியா முஸ்லிம் மக்கள் எதிர்க்கட்சியின் தலைமையில் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக பதாகைகளோடு முழக்கம் எழுப்பி வந்தனர். இரவு பகலாக அங்கே முகாமிட்டு போராடி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு வியாழக்கிழமை அதிகாலை அந்த சதுக்கத்தை போலீஸôர் சுற்றி வளைத்தனர். அங்கிருந்தவர்களை அடித்து விரட்டினர். எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டை பயன்படுத்தினர்.
இந்த மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸôரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர். இதனிடையே வீதிகளில் ராணுவ டாங்கிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளதால் அங்கு நடக்கும் போராட்டத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply