விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இன்று காலை காலமானார்

தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் தனது 81 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 மணியளவில் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் காலமாகியுள்ளதாக முன்னா நாடாளுமன்ற உருப்பினர் சிவாஜீலிங்கம் தெரிவித்துள்ளார். இதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மயிலேறும் பெருமாளும் உறுதிப்படுத்த உள்ளார்.
 
 
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பார்வதியம்மாள் யாழ் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply