2011 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ணப் போட்டியின் இரண்டாவது போட்டியில் நியூஸ்லாந்து அணி வெற்றி

2011 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ணப் போட்டியின் இரண்டாவது போட்டியில் நியூஸ்லாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ணப் போட்டியின் இரண்டாவது போட்டி இன்று கென்யா மற்றும் நியூஸ்லாந்து மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய கென்யா அணி 24 ஓவர்களில் 69 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கென்யா அணி சார்பில் அதிகூடிய ஓட்டமாக 16 ஓட்டங்களை செரின் வோட்டர்ஸ் மற்றும் ரஹீப் பட்டேல் பெற்றுக் கொண்டனர். நியூஸ்லாந்து அணி சார்பில் ஹமீஸ் பென்னட் விக்கட்டுகளையும், சவ்த்தி மற்றும் ஓரம் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

70 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக குப்தில் மற்றும் பிர்ணடன் மக்கலம் களமிறங்கனர் இதில் அதிரடியான துடுப்பெடுத்தாடிய குப்தில் ஆட்டமிழக்காது 32 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் பிரண்டன் மக்கலம் ஆட்டமிழக்காது 17 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply