லிபியா ஜனாதிபதி கடாபி தப்பியோட்டம்

லிபியா ஜனாதிபதி முகமது கடாபி நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை அரசுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டம் வலுவடைந்து வருவதால் அரசு ஆர்ப்பாட்டத்தை அடக்க விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பைதா, பெங்ஹசி ஆகிய நகரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றிவிட்டனர். முக்கிய அரசுக் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்திபட்டுள்ளன. பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் வன்முறைத் தாக்குதல் நடத்தினர். இதில் 223 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தன்னார்வ அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.

அரசுக்குச் சொந்தமான அல்-ஜமாஹிரியா தொலைக்காட்சி, அல்-ஷபாபியா வானொலி நிறுவனக் கட்டடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதேவேளை போராட்டத்துக்குப் பயந்து பின்வாங்கப் போவதில்லை என கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply