லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு பாதுகாப்பு வழங்க தயார்
லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சில் உள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மூலம் லிபிய தலைவருக்கு இராஜதந்திர மட்டத்தில் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அரச தலைவர்களில் லிபிய தலைவர் முக்கிய இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமால் ராஜபக்ஷ, கடாபியின் மகனான சையிப் அல் இஸ்லாம் பின் கடாபிக்கு மிகவும் நெருக்கமானவராவார்.
லிபிய தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரி தலைநகர் திரிபோலி உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கடாபி வெனிசுலாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக நேற்று சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. எனினும் அவர் இன்று ஊடகத்தில் தோன்றி தான் லிபியாவில் இருப்பதாகவும் தப்பிச் சென்றாக கூறப்படும் செய்தியை மறுத்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply