தப்பியோடவில்லை என கடாபி அதிரடி அறிவிப்பு

லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபிக்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமடைந்து வரும் நிலையில் “நான் நாட்டை விட்டு தப்பியோடவில்லை” என அந்நாட்டு அரச தொலைக்காட்சி சேவையில் தோன்றிய கடாபி தெரிவித்துள்ளார். தான் வெனிசூலாவிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்படுபவை பொய்யென்றும் ஒருபோதும் பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடாபிக்கு ஆதரவான இராணுவத்தினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுடப்படுவதாகவும் சடலங்கள் வீதிகளில் கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகள் பல கடாபிக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply