பயங்கரவாதிகளுக்கு மறுவாழ்வளிக்கும் விவகாரத்தில் இலங்கை உலகத்திற்கு முன்னுதாரணம் : ஜனாதிபதி

முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விவகாரத்தில் இலங்கை உலகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மறுவாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த பயிற்சிகளைப் பயன்படுத்தி தமது வாழ்க்கையை மேம்படுத்தி வருதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5800 முன்னாள் போராளிகள் ஏற்கனவே சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மறுவாழ்வு மையங்களாக மாற்றமடைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகள் குற்றவாளிகளை உருவாக்கும் இடங்களாக அமையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply