லிபியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு ஒபாமா கண்டனம்

லிபியாவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அமைதியான வழியில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மீது லிபிய அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வன்முறைத் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லிபிய விவகாரம் குறித்து நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறைச் சம்பவங்களுக்கு லிபிய அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். லிபியாவின் பல நகரங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லிபியாவிற்கு எதிராக மேலும் பல தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி முஹம்மர் கடாபியின் அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்காது செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply