ஐரோப்பிய குழு யாழ். அரச அதிபரையும் சந்தித்தது
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழுவினருக்கும் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் உதவிகள் பொதுமக்களைச் சென்றடைகிறதா என ஆராய்வதற்கு இலங்கைக் குவிஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் குழுவினர் நேற்றுயாழ். அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் பொதுமக்களுக்கான உதவிகள் சென்றடையும் விதம் அவர்களுக்கு தேவையான உதவிகள் சென்றடைகின்றனவா? இவ் உதவிகள் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நன்மையடைகின்றனரா என்பது குறித்து அவர்கள் யாழ். அரசஅதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இதைவிட உள்ளூராட்சித் தேர்தல், இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் என்பன குறித்தும் அவர்கள் கேட்டறிந்து கொண்டதாக அரச அதிபர் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply