சம்பந்தன் தலைமையில் சென்னையில் கூட்டமைப்பு ஆலோசனை
மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உபகுழுக் கூட்டத்தில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தற்போதைய அரசியல்கள நிலவரங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் கடந்த வாரம் சென்னையில் இடம் பெற்றது.
சென்னையில் வைத்திய சிகிச்சை காரணமாக தங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் உப குழுவில் இடம்பெறும் ஏனைய உறுப்பினர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கனககேஸ்வரன் ஆகியோரே இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இதுவரை அரசுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் தொடர்பாக குழுவினர் சம்பந்தனுக்கு விளக்கமளித்தனர்.அடுத்தகட்டப் பேச்சுக்களில் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இழுத்தடித்துச் செல்லாமல் எதிர்வரும் மே,ஜூன் மாதங்களுக்குள் பேச்சை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply