முள்ளியவளை நகருக்குள் இராணுவம் பிரவேசம் குளமுறிப்பு புலிகளின் பயிற்சி முகாம், தொலைத்தொடர்பு கோபுரம் படையினர் வசம்

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத் திற்குள் பிரவேசித்துள்ள படையினர் குள முறிப்பு பகுதியிலுள்ள புலிகளின் பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும், பதுங்கு குழிக ளுடன் 400 அடி உயரமான தொலைத் தொடர்பு கோபுரம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சகல வசதிகளுடன் பத்து குடில்களும் பிர தான விரிவுரை மண்டபமும் அமைக்கப்ப ட்டிருந்த பாரிய பயிற்சி முகாமையே படை யினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார்.

முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழு மையாக விடுவிக்கும் நோக்குடன் முல் லைத்தீவை நோக்கிக முன்னேறிவரும் இரா ணுவத்தின் 59 வது படைப்பிரிவினரே புலி களின் பாரிய பயிற்சி முகாமையும் தொலை த்தொடர்பு கோபுரத்தையும் கைப்பற்றியு ள்ள அதேசமயம், தமது வெற்றிகரமான படை நடவடிக்கையினால் முள்ளியவளை நகருக்குள் நேற்றுக்காலை பிரவேசித்துள்ள தாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

ஓட்டுசுட்டான்- முல்லைத்தீவு ஏ௩4 பாதை யின் பிரதான வீதியில் முள்ளியவளை பிரதேசம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலு ள்ள பாரிய நகரம் முள்ளியவளை என்றும் அவர் கூறினார். இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 59 வது படைப் பிரிவினரும், 16வது இலகு காலாற் படையினரும் இணைந்து புலிகள் மீது கடு மையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தற்பொழுது முள்ளியவளை நகருக்குள் பிரவேசித்துள்ள படையினர், புலிகளின் இலக்குகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப் பிட்டார்.

அதேசமயம் நேற்று முன்தினம் காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை முள்ளியவளை வடக்கு மற்றும் குள முறிப்பு பகுதிகளில் இருதரப்பினருக்கும் இடை இடையிடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது முள்ளிய வளை வட பகுதியிலுள்ள தமது பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை விஸ்தரித்து ள்ளனர். இந்த மோதலின் போது புலிகளு க்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 1.00 மணிய ளவில் புலிகளின் பாரிய பயிற்சி முகா மையும் காலை 10.00 மணியளவில் தொலைத் தொடர்பு கோபுரத்தையும் பதுங்கு குழிகள் மற்றும் மிக ஆழமான யுத்த அகழிகளையும் படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதேவேளை, கிளிநொச்சி, அடம்பன், இரணைமடு மேற்கு, வன்னேரிக்குளம் கிய பகுதிகளிலும் முகமாலை, கிளாலி மற்றும் பொன்னாறு ஆகிய பகுதி களிலும் இருதரப்பினருக் கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply