மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு அரசு விசேட வேண்டுக்கோள் விடுத்துள்ளது
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்குள்ள உயர்ஸ்தானிகராலயத்துடன் தொடர்பில் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. லிபியா, ஓமான் மற்றும் பஹ்ரேன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பல்வேறு பிரதேசங்களில் அசாதாரண நிலை தொடர்ச்சியாக காணப்படுகின்றமையை அடுத்தே அரசாங்கம் இந்த வேண்டுக்கோளை விடுத்துள்ளது.
இதேவேளை, குறித்த நாடுகளிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயங்களுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று காலை முதல் தொடர்ச்சியாக தகவல்களை பரிமாறிவருகிறது. இந்த சேவை 24 மணித்தியாலங்களும் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply