வானூர்திகள் விபத்து – விசாரணைகள் ஆரம்பம்
நிட்டம்புவ யக்கல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இலங்கை வான்படைக்கு சொந்தமான இரண்டு கபிர் ரக வானூர்திகள்; தொடர்பில் விசாரரணைகளை நடத்துவதற்கு, விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வான்படைத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இலங்கை வான் படையின் 60 வது வருட நிறைவு நிகழ்வு கொண்டாட்டத்துக்கான, கண்காட்சி பயிற்சிக்காக ரத்மலானைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு கபிர் வானூர்திகளே விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த இரண்டு வானூர்திகளும் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதான தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது வானூர்தி செலுத்துநர் ஒருவர் பலியானார். மற்றும் ஒரு வானூர்தி செலுத்துநர் உயிர் தப்பியுள்ளார். வானூர்தி நிலத்தில் வீழ்ந்தபோது பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்துக்குள்ளான வானூர்திகளில் ஒன்று வீதி ஒன்றில் உடைந்து வீழ்ந்துள்ளது.
மற்றும் ஒரு வானூர்தி வீடுகள் இருந்த இடத்தில் வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக சில வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இதற்கிடையில் விபத்தில் பலியான விமானி, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பாரிய பங்காற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply