துண்டாடப்பட்டிருந்த இலங்கையை ஒன்றுபடுத்தியவர் ஜனாதிபதி மஹிந்தவே
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இடம் பெறுகின்ற சதி முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காக தேசப்பற்றாளர்கள் ஒன்றுபடுவது மிகவும் அவசியம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார். தற்போது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இடம்பெற்ற சதி முயற்சிகளுக்குப் புலிகள் இயக்கத்தினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒத்து ழைப்பு நல்குகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.ம.சு. கூட்டமைப்பும், தே.சு. முன்ன ணியும் ஜனாதிபதி முன்நிலையில் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத் திட்டது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளுமாக 27 ஸ்தாப னங்கள் ஆதரவு நல்கின. இவ்வாறு பரந்த ஆதரவை முன்னர் எந்தத் தலைவருமே பெறவில்லை. இப்போது தே. சு. முன்ன ணியும் ஜனாதிபதிக்கு ஆதரவு நல்க முன் வந்திருக்கின்றன. இலங்கையின் சிறந்த எதிர்காலத்திற்கு இவை நல்ல அடித்தமாகும்.
பலவீனமானவர்கள் ஆட்சித் தலைவர்க ளாக இருக்கும் போதுதான் நாடுகள் துண்டாடப்படுகின்றன. இது தான் உலக நிலைமை. இலங்கையிலும் அப்படியே நடந்து வந்திருக்கிறது. வரலாற்றிலும் இவ் வாறு இடம்பெற்றிருக்கிறது. அவற்றை நாம் மறந்து விடமுடியாது. எமது ஜனா திபதி துண்டாடப்பட்டிருந்த இலங்கையை ஒன்று படுத்தியுள்ளார். நாட்டுக்கு சிறந்த தலைமை வழங்குகிறார்.
2005ம் ஆண்டில் ஜே. வி. பி., ஐ. ம. சு. கூட்டமைப்புடன் இணைந்த போது மக்கள் பாரிய எதிர்பார்ப்பை கொண்டிருந் தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட முன்னரே ஜே. வி. பி. யினர் ஆட்சியிலிருந்து வெளியேறி விட்ட னர். ஜே.வி.பி.யினர் வெளியேறியிராவிட் டால் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நேர்ந்திருக்காது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply