மத்திய வங்கி குண்டுத் தாக்குதல் சம்பவ சூத்திரதாரி வவுனியாவில் கைது!
இலங்கை மத்திய வங்கி மீது 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி வவுனியா இரட்டைப் பெரிய குளம் சோதனைச் சாவடியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஏற்ப குறிப்பிட்ட நபருக்கு எதிராக பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சந்தேக நபர் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயனம் செய்த போது இரட்டைப் பெரிய குளம் சோதனைச் சாவடியில் வைத்து சிவில் படையணியைச் சேர்ந்த வீராங்கனை தயாவதீ (24151) அவரைச் சோதனை செய்துள்ளார். குறிப்பிட்ட நபர் மீது சந்தேகம் ஏற்படவே மேலதிக விசாரணைகள் நடத்தியதன் மூலம் விவரம் தெரியவந்துள்ளது.அதனையடுத்து அவரைக் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாணிப்பாயைச் சோந்த 61 வயதுடைய ராஜதுரை சற்குறு குலசிங்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் இவர் வவுனியா வைரகுளத்தைச் சேர்ந்தவரைப் போன்று போலியான அடையாள அட்டை ஒன்றை வைத்திருந்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply