பெரிய பரந்தன் பகுதியை நோக்கி இராணுவத்தினர் தாக்குதல்
எல்ரிரிஈ பயங்கரவாதிகளிடம் விடுவிக்கப்படாத பகுதிகளைக் கைபற்றும் இலக்குடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளை நோக்கி ஞாயிறு(டிச:28)இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். பரந்தன்,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு அன்மையில் பலமுனைகளிலும் தாக்குதல்களை நடத்திவரும் படையினர் எல்ரிரிஈயினரின் எதிர்தாக்குதல்களை முறியடித்துக்கொன்டு முன்னேறிவருகின்றனர்.
முதலாவது செயலணி படையினர் பரந்தனுக்கு 4கி.மீ.தொலைவிலுள்ள பெரிய பரந்தன் கிராமத்தை நேற்று அன்மித்துள்ளனர். கடந்த இருநாட்களுக்கு முன் எல்ரிரிஈயினரின் மிக முக்கி தளமான சின்ன பரந்தன் பகுதியை கைபற்றியதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்கடல் ஏரியிலிருந்து அடம்பன் கிராமம் வரையான பகுதியை இணைத்து பயங்கரவாதிகளால் அமைத்திருந்த பாதுகாப்பு மண் அணைக்கட்டை முதலாவது செயலணி படைப்பிரிவினர் கைபற்றியுள்ளதாக வன்னி களமுனைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை இரண்டாவது செயலணி படையினர் நய்னமடுவிலிருந்து புளியங்குளம்-நெடுங்கேனி பிரதான பாதையூடாக சென்று நெடுங்கேனி நகருக்கு 800 மீரர் தென்மேற்கில் நிலை கொன்டுள்ள நான்காவது செயலணி படையினருடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரதான தாக்குதல் அணியான 59வது படையினருக்கும் எல்ரிரிஈயினருக்குமிடையில் நந்திக்கடல் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினரின் பிரதான இலக்குகளான ஒட்டுசுட்டான்-முல்லைத்தீவு, அலம்பில் –முல்லைத்தீவு பாதைகளை கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவருவதாகும்.கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி முள்ளியாவளை-தண்ணியூற்று பாதையை கைபற்றியிருந்தனர்.இப்பாதைகளை கைபற்றினால் எல்ரிரிஈயினருக்கு தெற்குடன் இருந்த பிரதான தளங்களுக்கான தொடர்புகள் துன்டிக்கப்பட்டும்.
மேலும் படையினர் பரந்தன் மேற்கு பகுதியில் கைபற்றிய எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் 4 பெண் எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் சடலங்கள் உட்பட 08 உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் கைளித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply