முல்லை, கிளிநொச்சிக்கு 70 லொறிகளில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்

புது வருடத்தையொட்டி முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் 70 லொறிகளில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். இந்த இரண்டு மாவட்டங்களுக்குமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடனான 40 லொறிகள் இன்று காலையில் புறப்பட்டுச் சென்றன. நாளை மேலும் 30 லொறிகளில் கிடுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதே வேளை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இது வரை 650 இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்துள்ளதாகவும் இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply