நாளை மறுதினம் அரசுடன் பேச்சு நடத்தப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாகவே நாளை மறுதினம் அரசுடன் பேச்சு நடத்தப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வுக்கென ஜனாதிபதி நியமித்துள்ள உயர்மட்ட அமைச்சர்களுடனேயே தாம் பேச்சுகளை நடத்துவதாகவும், ஏனைய அமைச்சர்கள் இனப்பிரச்சினைத் தீர்வுதொடர்பாக அதை வழங்க முடியாது, இதை வழங்க முடியாது என வெளியிடும் கருத்துகள் குறித்து தாம் கவலைப்படப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஜனாதிபதியுடனான பேச்சுகளை இரண்டு கட்டப் பேச்சுகளாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள சந்திப்பு தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பானது. 29ஆம் திகதி இடம்பெறவுள்ள சந்திப்பு அரசியல் தீர்வு சம்பந்தமானது எனவும் சுமத்திரன் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply