யுத்தத்துக்கு செலவிடும் நிதியை வறுமை ஒழிப்புக்கு பயன்படுத்த வேண்டும் உலக நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

உலக நாடுகள் யுத்தத்திற்காக செலவிடும் நிதியை அபிவிருத்திக்காக செலவிடுவதற்கு முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக் கொண்டார். கொழும்பில் நேற்றைய தினம் சார்க் நாடுகளின் பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர்களுக்கான மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் உலக நாடுகள் யுத்தத்திற்குச் செலவிடும் நிதியை வறுமையொழிப்பு மற்றும் மக்கள் மேம்பாட்டுக்கான செயற்பாடுகளுக்கு செலவிடுவது சிறந்தது எனவும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்க மானது யுத்தத்திற்கு முடிவு கண்டுள் ளமை மட்டுமன்றி பாதுகாப் புக்கான நிதியினையும் குறைத்துள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2005 ம் ஆண்டு நாட்டின் தேசிய வருமானத்தில் ஐந்து வீதத்தை பாதுகா ப்புக்கு ஒதுக்கியதாகவும் அதனைத் தற்போது மூன்று வீதமாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொது சுகாதார வசதிகள் தொடர்பான சார்க் நாடுகளின் அமைச்சர்கள் மட்ட மாநாடு நேற்றுக் கொழும்பு சினமன்கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைச்சர்களுடன் பூட்டான், பங்களாதேஷ் நாடுகளின் தூதுக்குழுக்களும் கலந்து கொண்ட இம் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் உரையாற்றுகையில்,

2020 ம் ஆண்டிற்குள் பொது சுகாதாரம் மற்றும் குடிநீர் தேவைகளில் உலகம் தன்னிறைவு காணும். அதற்கான செயற் பாடுகளில் இலங்கை இப்போதே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

தெற்காசியாவைப் பொறுத்தவரை மிக குறைந்தளவு மகப்பேற்று மரணங்கள் நிகழும் நாடாக இலங்கை திகழ்வதுடன் மில்லேனிய அபிவிருத்தி இலக்கை அண்மித்துள்ள நாடாகவும் விளங்குகிறது.

நகர்ப்புறங்களின் சனத்தொகை அதிகரித்துவரும் நிலையில் கிராமப்புறங்கள் பாரிய அபிவிருத்திக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தனி மனித மற்றும் குடும்பம் சமூகங்களில் பொது சுகாதாரம் தொடர்பான தேவை அதிகரிக்கின்றன.

கடந்த காலங்களில் சந்திக்க நேர்ந்த இரு தாக்கங்களின் போதும் பொது சுகாதார வசதிகளை வழங்குவது தொடர்பில் வெற்றிகர மாக முகங்கொடுக்க முடிந்தமையை பெருமையாகக் குறிப்பிட முடியும்.2004 டிசம்பரில் இடம் பெற்ற சுனாமி பேரழிவு, 2009 இல் பயங் கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை களின் பின் மூன்று இலட்சம் பேர் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற் றத்திற்கு உட்படுத்தப்பட்டமையே இந்த இரு தாக்கங்களுமாகும்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் மிக மோசமான நெருக்கடியையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியவை. அரசாங்கம் அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள் மூலமும் புதிய அணுகுமுறைகள் ஊடாகவும் இதற்குத் தீர்வு கண்டது. ஆரம்பக் கல்வி பெறுவதில் ஆண், பெண் என்றில்லாமல் சகலருக்கும் சம வாய்ப்பு மற்றும் தாய் – சேய் சுகாதாரம் சம்பந்தமாக நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

2015 ஆம் ஆண்டிற்குள் தேசிய மட்டத்தில் வறுமையைக் குறைப்பது என்ற மில்லேனிய இலக்கை அண்மித்ததாக நாம் முன்னேறி வருகிறோம்.
இந் நிலையில் சிறந்த சுகாதாரம் ஆரோக்கியம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந் நிகழ்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்திய கிராமிய அபிவிருத்தி, “பஞ்சாயத்” ராஜ்ய” அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ் முக்த் ஆகியோரும் உரையாற்றியதுடன் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply