சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகு இத்தாலி கடலில் மூழ்கியது
சட்ட விரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த படகொன்று இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றி ஐம்பது பேர் வரையானவர்கள் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு அப்படகு பயணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதன் பயண இலக்கு இத்தாலியா அல்லது வேறு ஏதேனும் நாடா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
படகு, வட ஆபிரிக்காவிலிருந்தே சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
லிபியா மற்றும் ஆபிரிக்காவின் பல்வேறு நாட்டவர்களும் பிரஸ்தாப படகில் இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளும் அதில் பயணித்திருப்பதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply