தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் ஏற்படுத்த வேண்டும் : சோனியா

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த சிறுபான்மை தமிழ் மக்களுக்கு சம உரிமைகளையும், சம அந்தஸ்தையும் வழங்குவதற்கு அரசியல் சாசனத் திருத்தம் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கு காங்கிரஸ் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வு அளிப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறி;ப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply