81 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டம் நேற்று பாராளுமன்ற த்தில் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன. ஐ. தே. க., ஜே. வி. பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை பிரதமர் டி. எம். ஜயரட்ண சமர்ப்பித்துப் பேசினார்.

எதிர்க் கட்சியின் சார்பில் ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல விவாதத்தை ஆரம்பித்து வைத்து பேசினார். வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஐ. தே. கவும், ஜே. வி. பி. எம்.பிக்களும் எதிராக வாக்களித்தபோது 81 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.

அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியது இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்ற போது ஐ. தே. க. உறுப்பினர்கள் இருவரும் ஜே. வி. பி. உறுப்பினர்கள் இருவரும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுமே சபையில் இருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply