ஜப்பானில் மீண்டும் நில அதிர்வு; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் நேற்று மீண்டும் 7.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலில்லையென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரிலிருந்து 207 மைல் தூரத்திலும் 15.9 மைல் ஆழத்திலுமே 7.4 ரிச்டர் அளவில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உயரமான நிலப்பரப்புக்கு வெளியேற்றப் பட்டனர். புகுஷிமா டாய்சி அணு உலையில் பணியாற்றி வந்த ஊழியர்களும் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

இதேவேளை, மெக்சிகோவின் கவுதமாலாவில் நேற்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கின. சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply