உயர் பாதுகாப்பு வலயங்களை பேணுவதற்கான அவசியம் கிடையாது : த.தே.கூ
உயர் பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்தும் பேணுவதற்கான அவசியம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. வடக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும், அரசாங்கத்தின் சார்பில் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயங்களினால் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதென மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர் மக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீள் குடியேற்றுவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவிலான இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 13 திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக சரியான அதிகாரப் பகிர்வினை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply