த.தே.கூ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் திருகோணமலையில் சத்தியப்பிரமாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது தெரிவான உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை(10-04-2011) காலை திருகோணமலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று(10-04-2011) காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம் இடம் பெற்றது.
இதன் போது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய பன்னிரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கட்சியன் தலைவர் இரா. சம்பந்தர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நிகழ்வின் போது கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அமைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,எஸ்வினோ நோகராதலிங்கம்,அரியநேந்திரன்,சுரேஸ் பிரேமச்சந்திரன்,சிரிதரன்,சரபணபவன்,புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply