அரசுடனான பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு 46 அதிகாரங்களை TNA முன்வைத்துள்ளது

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரம், வெளிநாட்டு நிதியுவதிகளை நேரடியாக பெறுவதற்கு அனுமதி, துறைமுகம், வடிகாலமைப்பு, பெற்றோலிய வளம், மீன்பிடி, வானொலி,தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட 46 அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என கூட்டமைப்பு, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் யோசனை முன்வைத்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், உயர்க்கல்வி, நீரியல்வளம், கடலோர பாதுகாப்பு, மின்சக்தி, போக்குவரத்து, பெருந்தெருக்கள், வீடமைப்பு, நிர்மாணம், சுற்றுலாத்துறை கூட்டுறவு வங்கி, நகர விவகாரங்கள், வாகன வரி, நீதிமன்ற வரி அறவீடு உள்ளிட்ட அதிகாரங்களும் உள்ளடங்குகின்றன. இதனை தவிர வடக்கு கிழக்கில் உள்ள சகல வளங்களையும் நிர்வகிக்கும் மற்றும் முகாமைத்துவம் செய்யும் அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகள் விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைக்கு சமமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி இந்த யோசனைகளை தயாரித்துள்ளதாகவும் இந்த யோசனைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply