சரத் பொன்சேகா கைது விவகாரம் தொடர்பில் சர்வசே பாராளுமன்றில் முறைப்பாடு செய்யப்படும் : UNP
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதி சர்வதேச பாராளுமன்றின் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்றின் தண்டனைக்கு அமைய சரத் பொன்சேகா பாராளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளதாகவும், இதனால் அவரது உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச பாராளுமன்ற அமர்வுகளின் போதும் சரத் பொன்சேகா தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு செய்திருந்தது.
சுதந்திர தினமன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரோசி சேனாநாயக்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரின் பாராளுமன்ற உரிமை மறுக்கப்பட்டதாக ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் நொச்சியாகம பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்தும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் சட்டவிரோத, ஜனநாயக விரோத மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமம குழுவிடம் முறைப்பாடு அரசாங்கத்தின் சட்டவிரோத, ஜனநாயக விரோத மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமம குழுவிடம் முறைப்பாடு செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பனாமாவில் நடைபெற உள்ள சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 124 வது கூட்டத் தொடரில் தானும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில், சரத் பொன்சேக்காவின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்த, விசாரணைகள் நடைபெற உள்ளதாகவும் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply