நாடு பாரிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகர்கின்றது : ஜனாதிபதி

நாடு பாரிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி முன் நகர்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2016ம் ஆண்டில் 4000 அமெரிக்க டொலர் தலா தேசிய வருமானம் என்ற இலக்கினை எட்டுவது கடினமான சவாலாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இலக்கினை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2010ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் 2053 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட தலா தேசிய வருமானம் 2010ம் ஆண்டில் 2400 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக்காலமாக நாடு அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply