இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது : பலஸ்தீனம்
போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கையின் உள்வி வகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது என பலஸ்தீன அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளதை அடுத்தே பலஸ்தீன அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துவிட்டு, ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான முறையில் இலங்கை அரசு பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
அதன் காரணமாக பல்வேறு குழுக்களை அமைத்து அல்லது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதை சர்வதேசம் உடனடியாக நிறுத்த வேண்டும் என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்யக்கூடாது என சீனா சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட மனித உரிமை அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக சீனா இவ்வாறு தெரிவித்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply