அவாமி லீக் கட்சி அபார வெற்றி

வங்கதேசத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 299-தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவாமி லீக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  வங்கதேசத்தில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.இதில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணிக்கு 75-சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பேகம் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு 10-சதவீதத்திற்கு குறைவான இடங்களே கிடைத்துள்ளன.இதையடுத்து ஷேக் ஹசீனா ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அட்சிக்கு வருகிறார்.இரண்டாண்டு கால காபந்து அரசின் ஆட்சியும் முடிவுக்கு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply