புதுவருடத்தை முன்னிட்டு 450 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்
தமிழ்-சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 450 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். விடுதலை செய்யப்பட உள்ள அனைவரும் திருமணமானவர்கள். ஆரம்பத்தில் 12 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது 4 ஆயிரத்து 700 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் ரணசிங்க கூறியுள்ளார். இவர்களில் இருந்தே இந்த 450 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.
விடுதலை செய்யப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புதுவருடத்தை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பரிசு பொருட்களும் வழங்கப்பட உள்ளன. புது வருடத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலி உறுப்பினர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஏனைய சிறைகளில் உள்ள எவரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply